fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆபாச படம் பார்க்கும் விவகாரம்.. வந்த போன் கால் உண்மைதானா.. நெல்லை வாலிபர்கள் கலக்கம்

police

Tamil Nadu | தமிழ் நாடு

ஆபாச படம் பார்க்கும் விவகாரம்.. வந்த போன் கால் உண்மைதானா.. நெல்லை வாலிபர்கள் கலக்கம்

இணையதளத்தில் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து தொலைபேசியில் வைத்திருந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் முக்கியமாக குழந்தைகள் இருக்கும் ஆபாச படத்தை டவுன்லோட் செய்தாலோ தொலைபேசியில் சேமித்து வைத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆபாசம்  வீடியோ பார்த்ததாகவும் டவுன்லோட் செய்ததாகவும் வாலிபர்  ஒருவரிடம் தொலைபேசியில் போலீசார் தொடர்பு கொண்டு பேசி உள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அந்த ஆடியோவில் போலீசார் மிரட்டியதால் பயத்தில் உளறிய வாலிபர் ஆடியோ வெளியானது. இது சம்பந்தமாக வெளிவந்த செய்தி என்னவென்றால் ஸ்மார்ட்போன்கள் அல்லது கம்ப்யூட்டர் மூலம் டவுன்லோட் செய்யப்படும் ஆபாச படங்களை போலீசார் மறைமுகமாக கண்காணித்து வருகின்றனர்.

யாரெல்லாம் ஆபாச வீடியோ பார்த்தாங்க. எத்தனை மணிக்கு பார்த்தாங்க என லிஸ்ட் தயார் செய்ததாக செய்தி வெளியானது.

மருதகுளம் அருகே உள்ள செல்போன் டவரில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்.  மீண்டும் மீண்டும் டவுன்லோட் செய்பவர்களுக்கு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஒரு செல்போன் டவரில் மட்டும் 15 பேர்  ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கேட்கவில்லை என்றால் தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் சைபர் கிரைம் முழுமையாக குறையும் என்று காவல் துறையினர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை  மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வெப்சைட்டுகளை முடக்கி விட்டாலே 80% பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top