குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக இசையமைப்பாளர் இமான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படம் தெலுங்கில் ராயுடு எனும் பெயரில் வெளிவரவுள்ளது.