Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகருடன் எனக்குத் திருமணமா? மனம் திறக்கும் நடிகை
பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவுடன் திருமணம் குறித்து வெளியான தகவல்களுக்கு நடிகை நிகிஷா படேல் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தின் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நிகிஷா படேலிடம் பிரபுதேவாவுடன் நடிப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிகிஷா, நீங்கள் பிரபுதேவாவுடன் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள், நான் அவரையே திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். இதையடுத்து, நிகிஷா படேலுக்கு, பிரபுதேவாவுடன் திருமணம் என்கிற ரீதியில் சமூக ஊடகங்கள் முதல் செய்தித் தாள்கள் வரை செய்திகள் வெளியாகின. அவருக்குப் போன் கால்களும், மெசேஜ்களும் குவியவே, பிரபுதேவாவுடன் திருமணம் என்ற தகவலை நிகிஷா மறுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிகிஷா, பிரபு தேவாவுடன் எனக்குத் திருமணம் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பிரபுதேவா என்னுடைய சிறந்த நண்பர். அவரை நான் சார் என்றுதான் அழைப்பேன். மற்றபடி எங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை. இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான புலி படம் மூலம் அறிமுகமான நிகிஷா படேல், கடந்த 1985-ல் வெளியான தேரிமெஹர்பனியான் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜாக்கி ஷெராஃப் மற்றும் பூனம் தில்லான் ஆகியோருடன் நடித்து வருகிறார். அதேநேரம், முதல் மனைவி ரம்லத்திடம் இருந்து விவாகரத்துப் பெற்றுவிட்ட பிரபுதேவா, தற்போது தனியாகவே வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நயன்தாராவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. முதல் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற அதுவே காரணம் என்றும் கூறப்பட்டது.
