14 வயதில் திருமணம்.. நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்ட பட்டம்மாள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சமீபகாலமாக டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொடரின் சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது. எதிர்நீச்சல் தொடரில் உள்ள நடிகர், நடிகைகளை கணக்கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர். இதுவே இந்த தொடருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது.

தற்போது எதிர்நீச்சல் தொடர் சூடு பிடிக்க காரணம் பட்டம்மாள் அப்பத்தா. இந்த வீட்டில் தனக்கும் 40 சதவீதம் ஷேர் என்று சொல்லி குணசேகரனையே ஆட்டிப்படைத்து வருகிறார். பட்டம்மாள் அப்பத்தாவின் நிஜ பெயர் பாம்பே ஞானம். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read : எப்பா சாமி இப்பவாவது முடிவுக்கு வந்தீங்களே.. பாரதி கண்ணம்மாவில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரை போல பாம்பே ஞானமும் நிஜ வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது 14 வயதிலேயே தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பள்ளிக்கு செல்லும் போது தாலியுடன் தான் சென்று படித்தேன். அதுமட்டுமின்றி எனக்கும் என் கணவருக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம் என்று கூறியுள்ளார். பல போராட்டங்களுக்குப் பிறகு என்னுடைய இலக்கை 40 வயதுக்கு மேல் தான் நிறைவேற்றினேன்.

Also Read : தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

என்னுடைய முயற்சி அனைத்திற்கும் எனது கணவன் பக்க பலமாக இருந்தார். அவருடைய இறப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அதன் பின்பு புத்தகம் படிக்க ஆரம்பித்து புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். மேலும் தன்னுடைய திறமை மட்டுமல்லாமல் பெண்களின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும் என நாடகத் தொழிலை செய்தேன்.

நாடகக் கம்பெனியில் ஒரு பெண் நடிக்க வந்தால் அவர் வீட்டில் உள்ள முக்கியமான நபர்களான மாமியார் போன்ற சிலரை சேர்த்து நடிக்க வைப்பாராம். அப்படி இருந்தால் தான் அந்த பெண்ணிற்கு வீட்டிலும், வெளியிலும் சுதந்திரம் கிடைக்கும் என்ற சூட்சமத்தை அறிந்து வைத்துள்ளார் பாம்பே ஞானம். மேலும் இந்த வயதிலும் எதிர்நீச்சல் போட்டு சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பட்டம்மாள் அப்பத்தா.

Also Read : சன் டிவியின் டிஆர்பியை ஏற்றிய எதிர்நீச்சல் நாயகி நந்தினி.. வலி நிறைந்த ஹரிப்ரியாவின் சொந்த வாழ்க்கை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்