கீழே இருக்கும் புகைப்படங்களை பாருங்கள் இவர் யாரென்று ஞாபகம் வருகிறதா?


ஆம் நம் பன்னீர் புஷ்பங்கள், நேருக்கு நேர் போன்ற படங்களில் நடித்த நடிகை சாந்தி கிருஷ்ணாதான். மும்பையில் பிறந்த இவர் 16 வயதில் பன்னீர்புஷ்பங்கள் சினிமாவில் அறிமுகமானார். 19 வயதிலேயே நடிகர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்துவிட்டு சினிமாவில் இருந்து விடைபெற்றார். 26 வயதில் மம்முட்டியின் கதாநாயகியாக மீண்டும் நடிக்கவந்தார். அதை தொடர்ந்து முதல் திருமணம் முறிந்தது. அடுத்து தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டு, மீண்டும் சினிமாவில் இருந்து விலகினார். அந்த வாழ்க்கையும் வெகுகாலம் நீளவில்லை. பிரிவு ஏற்பட்டது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன் மிதுல், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் மிதாலி ஆகியோருடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அதோடு சினிமாவில் மூன்றாவது ரவுண்டாக அடியெடுத்துவைக்கிறார், அம்மா வேடத்தில்! இது பற்றி அவர் கூறும்போது

“நான் வாழ்க்கையில் வேதனையை அனுபவிக்கும்போதெல்லாம் என் கண்ணீரை துடைத்துவிட சினிமா என்னை தேடி வந்திருக்கிறது. நான் திருமணத்திற்கு பிறகு சினிமா நினைவே இல்லாமல் குடும்பப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று தாம்பத்ய வாழ்க்கை தகர்ந்தது.

இனிமேல் பிரச்சனை வரக்கூடாது என்ற முடிவோடுதான் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தேன். முதலில் நடந்ததுபோல் ஆகி விடக்கூடாது என்று நினைத்து மிகுந்த கவனமாக இருந்தேன். ஆனால் இரண்டு பிரிவும் வெவ்வேறு சூழ்நிலைகளால் உருவாகிவிட்டது.

இன்னொரு திருமணம் பற்றி நான் நினைத்துப்பார்க்கவே இல்லை. திருமணம் என்பதே அலுத்துவிட்டது. இனி என் வாழ்க்கையில் என் குழந்தைகளும், நடிப்பும், நடனமும் மட்டும்தான்.”

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அய்யோ பாவம்