Connect with us
Cinemapettai

Cinemapettai

marma-thesam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடுநடுங்க வைத்த மர்ம தேசம் சீரியல் குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்

பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் மர்மதேசம் விடாது கருப்பு என்ற சீரியல் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொண்ணூறுகளில் வளர்ந்த பிள்ளைகளிடம் இந்த சீரியலை பற்றி கேட்டால் தெரியும். இதை பார்த்துவிட்டு இரவில் வெளியில் தனியாகச் செல்வதற்கு பயப்பட்டவர்கள் பலர்.

அந்த சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அதற்கு காரணம் அந்த சீரியல் இந்த ஊரடங்கு சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பப் பட்டது தான். மறு ஒளிபரப்பில் டிஆர்பி-யில் செம சாதனை படைத்துள்ள தாம் அந்த சீரியல்.

அந்த சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் லோகேஷ். அதன் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் இல்லாததால் ஒதுங்கிக் கொண்டாராம்.

தற்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் செம வைரல் ஆகி விட்டது.

lokesh-marmadesam-fame

lokesh-marmadesam-fame

Continue Reading
To Top