fbpx
Connect with us

ஜல்லிக்கட்டுக்கு வருகிறார் மார்கண்டேய கட்ஜூ: போராட்ட இளைஞா்களை பாராட்டுகிறார்

ஜல்லிக்கட்டுக்கு வருகிறார் மார்கண்டேய கட்ஜூ: போராட்ட இளைஞா்களை பாராட்டுகிறார்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் உச்சநீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.

இந்த நிலையில், ‘அவசரச் சட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரே தீர்வு!’ என்று அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கும் கருத்து தமிழக இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.

அவசர சட்டமானது குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அமல்படுத்தப்படுவதால் இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

தமிழும், தமிழர்களும் நீண்ட பாரம்பர்யமும் பண்பாடும் உடையவர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே ஜல்லிக்கட்டுப் பற்றிய குறிப்புகளை நான் படித்ததாய் எனக்கு நினைவு உள்ளது.

மேலும், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிப்பது அவசியமாகிறது.

இளைஞா்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதன்காரணமாக, அவர்களின் போராட்டம் வெற்றியடையும் என்றும் எனக்கு நம்பிக்கையுள்ளது.

கடந்த காலத்தைப் பற்றிப் பேச வேண்டாம். இனிமேல், நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கு எதிரான எந்தவொரு செயலும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.

சட்டரீதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில்,அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்பேன்.

இவ்வாறு அவா் விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top