ஐபிஎல்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இரண்டு ஆண்டு தடையை தாண்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் விளையாடுகின்றனர்.

rr – csk

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்ற மாதம் நடந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு வீரர்கள் மாறினர். பல அணிகள் புதிய வீரர்களை எடுத்தனர். அவ்வாறு சென்னை அணி தேர்ந்துடுத்த 26 வயதான வேகப்பந்துவீச்சாளர் தான் இங்கிலாந்தின் மார்க் வுட் .

இங்கிலாந்தின் டர்ஹாம் நகரைச் சேர்ந்த உட், 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

மார்க் வுட்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இணையதளத்துக்கு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னைத் தேர்வு செய்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் விளையாடும்போதுதான்  அதிகமான விஷயங்களைக் கற்க முடியும். அதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் போது, நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு அருகே இருந்து பார்த்து கற்றுக்கொள்ள முடியும்.

mark wood

அதிலும் எங்கள் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியுடனும், மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோவுடனும் நான் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு . ஒரு மேட்ச் வின்னராக ஜொலிக்க இருவரின் ஐடியாவின் உதவியும் எனக்கு வேண்டும்.

வேகப்பந்துவீச்சாளர்களைச் சுற்றி எப்போதும் ஒருவிதமான நெருக்கடியும், அழுத்தமும் இருந்து கொண்டே இருக்கும். என்னுடைய பந்துவீச்சில் “ஸ்லோபால்” முறையை திருத்தி, அதை வலுப்படுத்தியவர் பிராவோதான். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டிகளில், அதிலும் சிறந்த அணியில் விளையாடுவதை யார்தான் விரும்பமாட்டார்கள். நான் மிகவும் லக்கியாக உணர்கிரேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.