நாட்டின் 68வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கோட்டையில் முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மெரீனா கடற்கரையில் நடந்துவரும் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் குடியரசு தின கலைநிகழ்ச்சிகளை அவர் கண்டுகளித்தார்.

இந்நிலையில், ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவுக்கு சென்னை மெரீனாவில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி விழாவை கண்டுகளிப்பர்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் அறப்போராட்டத்தை நடத்தி உலகையே வியந்து பார்க்கவைத்த நிலையில், குடியரசு தினவிழாவை புறக்கணிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனால், காந்தி சிலை அருகே இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கூட்டமில்லாமல் சென்னை மெரீனாவே வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாணவர்களும் இளைஞர்களும் நினைத்தது அரங்கேறியுள்ளது.

மேலும், மாணவர்கள் மீது உள்ள நம்பிக்கை தமிழக மக்களிடையே நிரூபித்துக்காட்டியுள்ளது என்றே கூறலாம்.