சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை களங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு தினமும் பொழுது போக்குக்காக ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் எனவே அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவு தரக்கூடாது. அது மட்டும் இல்லாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஜனநாயகபடி போராட்டம் நடத்த முறைப்படி இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.