Connect with us
Cinemapettai

Cinemapettai

julie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மடத்தனமாக புகைப்படம் வெளியிட்ட ஜூலி.. திட்டி அட்வைஸ் கூறிய பிக்பாஸ் பிரபலம்

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தாலும் மீடியாக்களால் பெரிதாய் காட்டப்பட்டவர்கள் வெகுசிலரே. அப்படியான சிலரில் முதன்மை வகிக்கிறார் வீரத்தமிழச்சி ஜூலி போராட்டத்திற்கு முன்பு வரை ஒரு செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி போராட்டத்திற்கு பிறகு வேறலெவல் வளர்ச்சி கண்டார்.

பிக்பாஸ் முதல் சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி மக்கள் பலராலும் கவனிக்கப்பட்டார் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ் மக்கள் கழுவி ஊற்றவும் தயங்கவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு வசைபாடல்களை கண்டாலும் ஜூலிக்கான வாய்ப்புகளோ கொஞ்சம் நஞ்சமில்லை வழக்கமான மீடியா முகங்களை போலவே படுபிசியாக உள்ளார்.

அம்மன் தாயி, அனிதா எம்.பி.பி.எஸ் என அடுத்தடுத்த ப்ராஜக்டுகள் இருந்தாலும் இப்போது சூட்டிங்கிற்கான அனுமதி கிடைத்து கொரனா தொற்று கட்டுப்படாமல் இருப்பதால் இன்னும் சில நாயகிகள் வெளிவராமல் உள்ளனர்.

ஆனாலும் சமூக வலைகளுக்காக பல்வேறு போட்டோ சூட்டில் பிசியாக உள்ளனர். அதே போல ஜூலியும் தன் பங்கிற்கு போட்டோ சூட் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் விட்டிருந்த புகைப்படங்கள் பல ரியாக்சன்களை கிளப்பியுள்ளன.

maria juliana

maria juliana

தோளில் மெழுகுவர்த்தி வைத்திருப்பது போலவும் மெழுகை தோள்பட்டைகளில் உருகி வடிய விட்டார் போலவும் இருந்த அந்த புகைப்படங்களை கண்டு ஜூலி அக்கா என அன்போடு பிக்பாஸ் செட்டில் அழைத்து வந்த நடன இயக்குனரும் நாயகியும் பாஜக பிரச்சார பீரங்கியுமான காயத்ரி ரகுராம் கொதித்துள்ளார்.

மடத்தனமான செயல்களால் அழகுபடுத்த விரும்பாதே நீ நீயாக இருப்பதே அழகு என குறிப்பிட்டிருந்தார் காயத்ரி.

Continue Reading
To Top