Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் ஹாலிவுட் படத்தில் இணைந்த சூப்பர் ஹாட் இந்திய நடிகை யார் தெரியுமா.?

தனுஷ் கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட் என ஹீரோ ரோலில் நடித்துவிட்டார் . இன்றைய தேதிக்கு தென்னிந்தியா என்ற லிமிட்டை கடந்து, இந்திய அளவில் ரீச் உள்ள மனிதர்.

தமிழ் சினிமாவில் பிஸி என்றாலும் ‘அட்ரிங்கி டீ’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துவிட்டார். அதுமட்டுமன்றி நெட் பிலிக்ஸ் தயாரிப்பில் அவென்ஜர்ஸ் புகழ் ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் “the gray man” படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதற்காக கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் தனுஷ் அமெரிக்காவில் தங்கி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

THE GRAY MAN படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனாஸ் டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த லிஸ்டில் இந்திய நடிகை ஒருவரும் இணைந்துள்ளார்.

aishwarya sonar

இவர் தான் மராட்டிய நடிகையான ஐஸ்வர்யா சோனார். 2016 இல் வெண்டிலேட்டர் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2017ல் மராத்தியில் வெளியான ‘காய் ரே ராஸ்கலா’ என்கிற படத்தின் மூலம் பிரபலமான இவர்.

கிரே மேன் படத்திற்காக ஆடிசன் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆறு மாதங்களாக இந்தப்படத்திற்காக நடைபெற்ற நடிப்பு பயிற்சியிலும் கலந்துகொண்டாராம் ஐஸ்வர்யா சோனார். எனினும் சின்ன ரோல் தானாம் படத்தில்.

Continue Reading
To Top