fbpx
Connect with us

Cinemapettai

அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ரஜினியின் மரண மாஸ் பாடல்.. வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்.. வீடியோ

petta-maranamass

Videos | வீடியோக்கள்

அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ரஜினியின் மரண மாஸ் பாடல்.. வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்.. வீடியோ

40 ஆண்டுகளாக சினிமாவை பொறுத்தவரை பந்தய குறையாக இன்றுவரை அனைத்து நடிகர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான தர்பார் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினியிடம் பணம் பறிப்பதற்காக விநியோகஸ்தர்கள் படம் வெற்றி பெறவில்லை என கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த பாடல் மரண மாஸ். இளசுகளை பட்டி தொட்டி எங்கும் குத்தாட்டம் போட வைத்தது இந்தப் பாடல். இந்த பாடலின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால் கடல் கடந்தும் இந்த பாடல் சாதனையை நிகழ்த்தி இருப்பது தான் தற்போது பெரும் செய்தியாக பேசப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் பேட்ட. இதில் ரஜினிகாந்தின் அறிமுக பாடலாக உருவாகியிருந்தது மரண மாஸ்.

இதே பாடலை அமெரிக்காவில் நடன நிகழ்ச்சி ஒன்றின் இறுதிச்சுற்றில் மரண மாஸ் பாடல் இருக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. மேலும் தலைவர் ரசிகர்கள் வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை நிரூபித்து விட்டார் ரஜினி என கொண்டாடி வருகின்றனர்.

வீடியோ பார்க்க:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top