பல வருட கோபத்தில் ராகுல்காந்தி.. தமிழனா? எங்கேயோ இடிக்குதே

தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரின் பேச்சு மிக ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக அந்த பேச்சு மாறி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய பேச்சு தான் அது..

பேச்சு ஆரம்பித்ததிலிருந்து மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ்நாடு என்று தமிழகத்தை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார். மத்திய அரசுக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவை கிழித்து தொங்க விட போகிறார் என்று எவரும் எதிர்ப்பார்க்கவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழகம் தொடர்ந்து உங்களிடம் கேட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை.

இந்தியா என்பது ஒரு தனிநாடு அல்ல. பல அரசாட்சியின் கூட்டமைப்புதான் இந்தியா. நீங்கள் அரசியலமைப்பை படித்திருந்தால் இந்தியா பல மாநிலங்களில் ஒன்றியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட கூட்டாட்சி நாட்டில் மாநிலங்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் கூட்டாட்சியின் தத்துவம். நீங்கள் ஒன்றும் மன்னர் அல்ல. இது ஒன்றும் மன்னர் ராஜ்ஜியம் அல்ல என்று பிரதமரை சரமாரியாக வார்த்தைகளால் வறுத்து எடுத்தார்.

கடைசி பஞ்ச் தான் நெத்தியடியாக அமைந்தது தமிழக மக்களை உங்களால் ஒருபோதும் ஆளமுடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்றும் ஒரு போடு போட்டார். அந்தப் பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அதிர்ந்து போனது.

என்ன திடீர் என ராகுல் காந்தி தமிழகத்தின் மீது இவ்வளவு பற்று உள்ளவராக மாறிவிட்டாரே..? என்று ஒருபுறம் கிசுகிசுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை விட்டு அவர் வெளியே வந்த பிறகு ஒரு பத்திரிக்கையாளரும் அதே கேள்வியை கேட்டார். அதற்கு ராகுல் காந்தியோ “நான் ஒரு தமிழன்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று கூறும் அளவிற்கு அவரது பேச்சு இருந்தது. எத்தனை நாள் கோபமோ தெரியவில்லை மொத்தமாகக் கொட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று சமூக வலைதளங்களில் ஹீரோவாக ராகுல்காந்தி வலம் வந்து கொண்டிருக்கிறார்..விட்டால் “நானும் மதுரைக் காரந்தாண்டா ” என்று சொன்னாலும் சொல்வார் போல..!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்