சினிமா என்றால் எளிதாக சாதித்து விடலாம் என அனைவரும் நினைப்பார்கள் ஆனால் அது தவறு பல பிரச்சனைகள், பல சோதனைகள், பல தோல்வியை தாண்டிதான் ஒரு இடத்தை அடைய முடியும் அப்படிதான் பல நடிகர்கள் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள்.

உதாரணமாக உலக நாயகன் கமல் ஹாசனை எடுத்து கொண்டால் அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு வித்தியாசமான கெட்டப் மற்றும் வித்தியாசமான கதை, அழுத்தமான கருத்து இருக்கும், என பல விஷயங்கள் அவரின் படத்தில் இருக்கும்.

அதேபோல் நடிகர் ஆதர்வா படத்திற்காக வித்தியாசமான வேடம் போட இருக்கிறார், அவர் நடிக்கும் பூமராங் என்ற படத்திற்காக நடிகர் ஆதர்வா 3 வித்யாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார் படத்தில். அதற்க்கான மாதிரி வடிவமைப்புகளில் படக்குழு பயங்கர பிசியாக இருக்கிறது.

atharva
atharva

ஆதர்வா இந்த படத்தின் மேக்கப்க்காக 5 மணி நேரம் அப்படியே உட்காந்திருக்க வேண்டுமாம், மும்பையில் இருந்து வந்திருக்கும் மேக்கப் கலைஞர்கள் தொடர்ந்து 12 மணி நேரங்கள் மேக்கபுக்காக வேலை செய்து வருகிறார்கள், இந்த மேக்கப் போடும் பொழுது நடிகர் ஆதர்வா மூச்சி விட கஷ்ட்ட பட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here