Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்
தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பார்த்து பல குடும்பங்கள் தன்னை பாராட்டியதாக நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்து இருக்கிறார்.
கோலிவுட்டிற்கென சில அடையாளங்கள் இருந்தது. அதில், முக்கியமானவை அபாசம். இதை படத்தில் வைப்பதாக இருந்தால் கூட மறைமுகமாக தான் வைப்பார்கள். ஏன் திருமண முடிந்து நடிக்கும் சாந்தி முகூர்த்தம் கூட இப்படி தான் காட்சிப்படுத்த வேண்டும் என கோலிவுட்டில் ஒரு எழுதப்படாத விதியே இருந்தது. ஆனால் இது அனைத்தையும் உடைத்து கொண்டு வெளிவந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்தின் பெயரிலேயே பெரிய சர்ச்சைகள் உருவாகியது. கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்த இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்திருந்தார். படம் வெளிவரும் முன்னரே, டீசர் மற்றும் ட்ரைலரே படத்திற்கு அதிக எதிர்ப்புகளை உருவாக்கியது. இயக்குனர் பலரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என விமர்சித்தனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி வெளிவந்த படம், ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. சில நாட்களில் கோடிக்கணக்கில் வசூலித்து இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடித்த யாஷிகா ஆனந்த், தான் சந்தோஷ் பி.ஜெயராமனின் ஹரஹர மகாதேவகி படத்தை பார்த்து இம்ரஸாகியதாகவும், நடித்தால் அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். (நல்ல ஆவலம்மா உனக்கு!!!) அப்போது தான் எனக்கு இப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. உடனே ஒப்புக்கொண்டதாக தெரிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் சர்ச்சையை விட யாஷிகா சமீபத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்ட்கள் தான் மிகப்பெரிய சர்ச்சையாக கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறது. சின்ன வயதிலேயே பார்ன் படங்களை பார்த்து மாட்டினேன். திருமணத்திற்கு முன்னர் கன்னித்தன்மை போவது தவறு இல்லை என அதிரடி கமண்ட்களால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார். 18 வயதிலேயே பொண்ணோட இந்த அறிய வார்த்தைகளால் பலரும் கடுப்பில் இருக்கிறார்கள்.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா, தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் என்னலாம் அம்மணி பேசப்போதோ!
