Kaali vijay Antony

‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி உள்ளாராம். இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது, இசை அமைத்து, படத்தைத் தயாரிப்பதும் விஜய் ஆண்டனி தானாம்.

இந்நிலையில் இன்று மதன் கார்க்கி வரிகளில், ஜெகதீஷ் குரலில் “மனுஷா வா முன்னேற” என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

வரிகாணொளி வீடியோ