மன்சூரலிகான் தன் மகனை  நாயகனாக அறிமுகமாக்கும்  படம் கடமான் பாறை.

மன்சூர் அலிகான் கிட்டத்தட்ட  250 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல்  ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.

இவர் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து , கதை எழுத்து இயக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். படத்தின் நாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் ‘அலிகான் துக்ளக்’ அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக அனுராகவி  மற்றும் ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  பைரவா வசூல் முறியடிப்பு..! வசூல் செய்த படம் என்ன..?
Kadamaan Paarai

இந்த படத்தில் மன்சூரலிகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

படத்தை பற்றி பேசிய மன்சூரலிகான்

‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக் கதை. காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.’ என்றார்

அதிகம் படித்தவை:  விஜய் விவேகம் டீசரை பார்த்தாரா? வைரலாகும் போட்டோ

படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளாராம்.
பக்கா கமர்ஷியல்  படமாம்  கடமான் பாறை.

மகேஷ்.டி ஒளிப்பதிவு, ரவிவர்மா இசை. சொற்கோ, ரவிவர்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ராக்கி ராஜேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.