தம்பி இங்க கொஞ்சம் வாங்க? அஜீத்துக்கு மன்சூரலிகானின் அன்பு கடிதம்!

யார் என்ன சொன்னாலும், என நடந்தாலும் மனசுல பட்டதை பளீர்னு சொல்கிற டைப் மன்சூருஅலிகான்! ஊரெல்லாம் அஜீத்தின் விவேகம் பற்றி பாராட்டியும் திட்டியும் விமர்சனம் செய்து கொண்டிருக்க… மன்சூரின் கோரிக்கை வேறாக இருக்கிறது.

அவர் எழுதியது அப்படியே இங்கே-

தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல்தொழில்கலைஞர்களைவைத்து எடுத்துவிட்டீர்

mansoor alikhanதம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில்பயங்கர ரசிகர்பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்

படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்

Comments

comments