ஓவர் பேச்சால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்.. துரத்தி அடிக்கப்பட்ட அவலம்

Mansoor Ali Khan : இப்போது நடிகர்கள் பலரும் கட்சி தொடங்கி வருகிறார்கள். அதுவும் முதலமைச்சராக பதவி வகித்த பல பிரபலங்கள் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். சமீபத்தில் விஜய் கூட தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி இருந்தார். அதேபோல் மன்சூர் அலிகான் தலைமையில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தொடங்கப்பட்டிருந்தது.

இதன் தலைவராக மன்சூர் அலிகான் பதவி வகித்து வந்தார். ஊடகங்களில் அவர் கொடுக்கும் பேட்டி எப்போதுமே சர்ச்சையாகி விடும். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக மன்சூர் அலிகான் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்

மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் இந்திய ஜனநாயக புலிகள் கட்சிக்கு சீட் கொடுக்க இயலாது, எங்களுக்கு ஆதரவு மட்டும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அடுத்து நேற்றைய தினம் இரவோடு இரவாக ஜனநாயகப் புலிகள் கட்சியில் தலைவர் பொறுப்பிலிருந்து மன்சூர் அலிகான் தூக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கான காரணம் கட்சியுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் தன்னிச்சையாக மன்சூர் அலிகான் முடிவு எடுத்து வருகிறாராம். இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக பேசி மன்சூர் அலி கானை தலைவர் பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளனர்.

அதோடு இனி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பொதுச் செயலாளர் தலைமையில் தான் செயல்பட இருக்கிறதாம். மேலும் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டாலும் கட்சியின் தொண்டராக மட்டுமே செயல்பட முடியும். மன்சூர் அலிகானால் தொடங்கப்பட்ட கட்சியிலிருந்து அவரை நீக்கப்பட்டது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் தலைமையே சரியில்லை என்று தலைவர் பதவியில் இருந்து நிர்வாகிகள் நீக்கி உள்ளதால் அதற்கு எதிராக மன்சூர் அலிகான் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் ஓவர் பேச்சால் இப்போது மொத்தத்தையும் இழந்து நிற்கிறார் மன்சூர் அலிகான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்