புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரோகிணியை நம்பி நொந்து போன மனோஜ்.. எமோஷனலாக போட்ட பதிவு, கல்யாணி பற்றி உண்மை தெரிய வருமா?

Sirakadikkum Asai Serial: கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் உள்ள சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்தது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான். அதற்கு காரணம் முத்து மற்றும் மீனாவின் நடிப்பு எதார்த்தமான விஷயங்களை காட்டி மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுவிட்டது. ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் ரோகினி ஆட்டம் அதிகரித்துக் கொண்டே போவதால் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

அதிலும் எப்பொழுதுமே மீனா மற்றும் முத்துக்கு மட்டும் அதிகமான பிரச்சனைகளை வந்து கொண்டிருக்கிறது. அதை பார்த்து குளிர்காயும் விதமாக ரோகிணி ஒவ்வொரு பொய் பித்தலாட்டம் பண்ணி ஜெயித்துக் கொண்டே வருகிறார். முக்கியமாக ரோகிணி எப்படிப்பட்டவர், யார் என்ற விஷயம் இன்னும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இருப்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து கொண்டு வருகிறது.

இதனால் ரோகிணி எப்பொழுது கையும் களவுமாக மாட்டப் போகிறார். முத்து எப்படி உண்மையை கண்டுபிடிக்க போகிறார் என்பதை பார்க்கும் விதமாக மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எல்லாத்துக்கும் தற்போது நேரம் வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப ரோகிணி ஜெயிலில் இருப்பது போல விஜயா, ரோகினியை பார்க்க வருவது போல் சில வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது.

இந்த வீடியோ அதிக அளவில் ட்ரெண்டாகி கூடிய சீக்கிரத்தில் ரோகினி மாட்டப் போகிறார் என்பது போல் தோன்றியது. அதற்கு ஏற்ற மாதிரி முத்துவுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாத்தையும் சரி செய்து விட்டார். இதனை அடுத்து ரோகிணி அல்லல் படும் நேரம் வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப சிட்டி குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

அப்படி ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவந்தால் விஜயா முகம் அப்படியே தொங்கிப் போய்விடும். ஏனென்றால் அந்த அளவிற்கு ரோகினியை மலை போல் நம்பி தலையில் தூக்கி வைத்து ஆடினார். விஜயா மட்டும் இல்ல மனோஜும் அப்படித்தான் தனக்கு வந்த மனைவி போல் வேறு யாருக்கும் வரவில்லை. ரோகிணி வந்த பிறகுதான் தன்னுடைய வாழ்க்கையை மாறி இருக்கிறது என்பதற்கு ஏற்ப ரோகிணியை கொண்டாடுகிறார்.

ஆனால் இப்பொழுது ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளியே வரும் விதமாக மனோஜ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது யாரையும் நம்ப கூடாது என்று பாடம் கற்றுக் கொண்டேன். நம்முடைய வாழ்க்கையிலே யார ரொம்ப கண்மூடித்தனமாக நம்புறோமோ, அவங்க தான் நம்மளை ஏமாற்றி யாரையும் முட்டாள்தனமாக நம்பி விடக்கூடாது என்ற பாடத்தையும் கற்றுக் கொடுத்துட்டு போறாங்க என்பதற்கு ஏற்ப மனம் நொந்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

இது இவருடைய நிஜ வாழ்க்கையில செட் ஆகுதோ இல்லையோm சீரியலிலே ரோகிணி பற்றிய விஷயங்களை போட்டு உடைக்கும் விதமாக மனோஜ்க்கு கல்யாணி பற்றிய உண்மைகள் தெரிய வரப்போகிறது. அந்த வகையில் விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக மறுபடியும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை ஒய்யாரமாக ஜொலிக்கப் போகிறது.

- Advertisement -

Trending News