மனோஜ்க்கு கொலை மிரட்டல் கொடுத்து பயமுறுத்திய வேலை ஆட்கள்.. தனக்கு தானே சூனியம் வைத்த ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா என்ன சொன்னாலும் அதை சூடு சொரணை இல்லாமல் தலையாட்டிக் கொண்டு வேலை செய்யும் வேலைக்காரியாக மீனா பணிவிடை பார்த்து வருகிறார். அதனால் தான் விஜயா, மீனாவை அடிமைப்படுத்தும் விதமாக அதிகாரம் செய்து வருகிறார். அந்த வகையில் எனக்கு மதியம் சூடாக சாப்பாடு எடுத்துட்டு என் தோழி பார்வதி வீட்டுக்கு வந்துவிடு என்று ஆர்டர் போடுகிறார்.

அதற்கு ஆரம்பத்தில் முடியாது என்று முத்து மற்றும் மீனா சொல்லிய நிலையில் அண்ணாமலை உள்ளே புகுந்து நான் கொண்டு போகிறேன் என்று சொல்கிறார். இதனால் மாமனார் மீது இறக்கப்பட்ட மீனா, நீங்கள் வெயில் நேரத்தில் தேவையில்லாமல் அலைய வேண்டாம். நானே அத்தைக்கு சாப்பாடு எடுத்துட்டு போகிறேன் என்று சொல்கிறார்.

மனோஜை கண்டுக்காமல் சுற்றி தெரியும் ரோகினி

அதன்படி அனைவருக்கும் தேவையான மதிய சாப்பாடுகளை செய்து முடித்துவிட்டு விஜயாவிற்கும் சாப்பாட்டை எடுத்துட்டு போகிறார். ஆனால் போகும்பொழுது சாப்பாடு இல்லாமல் முதியவர்கள் நடுத்தெருவில் மயங்கி கிடந்ததை பார்த்ததும் விஜயாவுக்கு வைத்திருந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு கடையில் பிரியாணி வாங்கிட்டு மாமியாரிடம் கொடுத்து விடுகிறார்.

இதை விஜயா மற்றும் தோழி பார்வதி சேர்ந்து சாப்பிடுகிறார்கள். பிறகு வீட்டிற்கு வந்த விஜயாவிற்கு அந்த பிரியாணி ஜீரணமாகாமல் இருப்பதால் அவஸ்தைப்படுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை, உனக்காக மீனா சமைத்து எடுத்துட்டு வந்தா, ஆனா நீ அதை சாப்பிடாம ஏன் கடையில் வாங்கி பிரியாணி சாப்பிட்டாய் என்று கேட்கிறார்.

அப்பொழுது விஜயா, மீனாவை பார்க்கும் பொழுது என்ன இவர் சொல்கிறார் என கேட்கிறார். அதற்கு மீனா நான் போகும் போது பசியால் ரெண்டு முதியோர்கள் வாடி போய் இருந்தார்கள். அதனால் அந்த சாப்பாட்டை அவர்களுக்கு கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். உடனே விஜயா என் வீட்டு சாப்பாடு எடுத்து தானம் தர்மம் பண்ணுவதற்கு நீ யாரு. எனக்கு எடுத்து வந்த சாப்பாட்டை நீ எப்படி கொடுக்கலாம் என்று சண்டை போடுகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் மனோஜ்க்கு மொட்டை கடிதாசி எழுதி ஒருவர் வந்து கொடுக்கிறார். அதை பார்த்து படித்த மனோஜ் ரொம்பவே பதட்டத்துடன் பயப்பட ஆரம்பித்து விடுகிறார். அதில் உன் அம்மாவுக்கு நெஞ்சுவலி வரப்போகிறது. உன் தம்பி முத்து ஜெயிலுக்கு போகப் போகிறான். நீ தற்கொலை செய்து கொள்ளப் போகிறாய் என்று மிரட்டும் அளவிற்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.

இதை பார்த்து பயந்து போன மனோஜ் அந்த கடிதத்தை கொடுத்தவரே தேடி பார்த்து தெருத்தெருவாக அலைகிறார். ஆனால் இந்த வேலையெல்லாம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்க்கும் வேலையாட்கள் தான் மனோஜை மிரட்டி அந்த கடையை அபகரிக்க பிளான் பண்ணுவது போல் தெரிகிறது. தற்போது ரோகிணியும், மனோஜ் மற்றும் கடை பற்றி யோசிக்காமல் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதை சரி செய்யும் விதமாகவும், கிரிஸ்க்கு ஒரு ஸ்கூல் பார்த்து இங்கே கூட்டிட்டு வர வேண்டும் என்பதற்காக அலைகிறார்.

இன்னொரு பக்கம் விஜயாவிடம் முத்து மீனாவை பற்றி தவறாக சொல்லி எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று முழு கவனத்தையும் செலுத்துவதால் மனோஜ் பற்றிய சிந்தனை அவருக்கு வருவதில்லை. அதனால் கடைசியில் மனோஜ், எல்லாத்தையும் இழந்து மொத்தமாக ஏமாந்து போய் நடுத்தெருவில் நிற்க போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News