செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

திருந்தவே திருந்தாத ரோகிணி, ஜால்ரா அடிக்கும் மனோஜ்.. இருவரையும் தோலுரித்து காட்டப் போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவின் தோழி பார்வதி வீட்டில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு ரோகினி வித்யாவை கூட்டிட்டு சிட்டியை பார்க்கப் போகிறார். பார்த்தவுடன் நீ கேட்ட இரண்டு லட்ச ரூபாய் பணம் நான் இப்பொழுது தருகிறேன். ஆனால் இதற்குப் பிறகு என்னை தொந்தரவு பண்ணக்கூடாது பணம் கேட்டு என்று சொல்லிவிட்டார்.

அதற்கு சிட்டி, நீங்கள் கொடுக்கிற பணம் ஒன்னும் எனக்கு தேவையில்லை. இது அந்த PAக்கு செலவு பண்ணிட்டு கேரளாவுக்கு அனுப்பி அங்கிருந்து வடநாட்டில் எங்கேயாவது அனுப்பிருவேன். அதனால் இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார். அதன் பிறகு சிட்டி, PA விடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து இரண்டு மாதத்திற்கு இங்கே வர வேண்டாம்.

நான் சொல்லும் போது வந்தால் போதும் என்று அனுப்பி வைக்கிறார். அத்துடன் இனி நமக்கு பணம் காய்க்கும் மரமாக ரோகிணி இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அவளை பற்றி எனக்குத் தெரிந்ததனால் நான் கேட்கும் பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். இனி ரோகிணியின் துருப்புச்சிட்டு என்னுடைய கையில் உள்ளது என்று சிட்டி பிளான் பண்ணி விட்டார்.

அந்த வகையில் பொய் பித்தலாட்டங்களை பண்ணி ஏமாற்ற நினைக்கும் ரோகினிக்கு சிட்டி தினம் தோறும் டார்ச்சர் கொடுக்கப் போகிறார். அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி, ஷோரூம் வரும்பொழுது டீலர்ஷிப் கொடுத்த சந்தோஷ் என்பவர் கால் பண்ணி பேசுகிறார். இப்பொழுது ஒரு விளம்பரம் பண்ண வேண்டும் அதற்கு உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் நடித்து கொடுக்கணும்.

அவர்களுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே மனோஜ், ரோகினி இடம் நம்ம குடும்பத்தில் நமக்காக நடித்துக் கொடுப்பார்கள். ஆனால் அதற்காக நாம் பணம் கொடுக்க வேண்டாம். சந்தோஷ் கொடுக்கிற பணத்தை எல்லாம் நாம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டதும் ரோகிணி, மாமியார் பணத்தை நாம் திருடினோம்.

அதே மாதிரி மனோஜ், மொத்த குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டிய பணத்தை ஆட்டை போட்டு விட்டார் என்று மனதிற்குள்ளேயே சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அந்த வகையில் ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப இரண்டு பேருமே பொய்ப் பித்தாட்டங்கள் பண்ணி தில்லாலங்கடி வேலைகளை செய்து மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார்கள்.

இது எதுவும் தெரியாமல் முத்து அந்த வீட்டில் ஏமாந்த ஒரு டம்மி பீஸ் ஆக தான் அலைகிறார். அதே மாதிரி ஜாடிக்கேற்ற மூடியாக மீனாவும் மக்கு மாதிரி தான் யோசிக்கிறார். இவர்கள் இருவரும் இப்படியே இருந்தால் ரோகிணியும் மனோஜும் குடும்பத்திடம் மாட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதிலும் மனோஜ் ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டு முத்து கண்டுபிடித்து விடுவார்.

அப்படித்தான் இப்பொழுது நடக்க போற விளம்பர ஷூட்டிங்கிலும் சந்தோஷ் பணம் கொடுத்திருக்கிறார் என்ற விஷயம் முத்துவுக்கும் குடும்பத்திற்கும் தெரிந்துவிடும். ஆனாலும் அதன் பிறகு மனோஜ் ஏதாவது சொல்லி மற்றவர்களை ஏமாற்றி சூதானமாக நடந்து கொள்வார். இதனை அடுத்து விஜயா, பார்வதி வீட்டில் வைத்திருக்கும் பணத்தை கேட்கும் பொழுது பணம் அங்கே இல்லை என்றதும் மீனா மீது பழியை போட்டு பத்திரகாளி மாதிரி ஆட போகிறார். ஆனால் இதுதான் இருக்கிறது முத்துவின் ஆட்டம் என்பதற்கு ஏற்ப மனோஜ் மற்றும் ரோகினியின் முகத்திரையை கிழித்து தோலுரித்துக் காட்டப் போகிறார்.

- Advertisement -

Trending News