புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முத்துவுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் மனோஜ்.. திருட்டு வேலை பார்த்த ரோகினிக்கு கர்மா கொடுத்த பதிலடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா கடன் வாங்கி லாயருக்கு கொடுத்த அஞ்சு லட்ச ரூபாய் பணத்தை விஜயா தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லிவிட்டார். இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாத விஜயா, மனோஜிடம் கேட்கிறார். ஆனால் மனோஜ் என்னிடம் அவ்வளவு பணம் இப்பொழுது இல்லை என்று சொல்கிறார்.

உடனே விஜயா அப்படி என்றால் ரோகிணி நீ உன்னுடைய மாமாவுக்கு போன் பண்ணி பணத்தை கேளு என்கிறார். அதற்கு ரோகிணி அவரை இப்ப பார்த்து பேச முடியாது என்று சொல்லிய நிலையில் விஜயா அப்படி என்றால் நாம் டிக்கெட் போட்டு மலேசியாவுக்கு போகலாம் என்று சொல்கிறார். நேரடியாக பார்த்து பேசினால் உங்க மாமாவையும் அப்பாவையும் பார்த்த மாதிரி ஆகிவிடும் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் ரோகிணி, நாம் அங்கே போனால் நம்மளும் அந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்வோம் என்று சொல்லி சமாளிக்கிறார். அதற்கு விஜயா சரி அங்க போக வேண்டாம். ஆனால் நீ எப்படியாவது பேசி ஐந்து லட்ச ரூபாய் வாங்கி கொடு என்று ரோகிணி தலையில் குண்டை தூக்கி போடுகிறார். ரோகிணிக்கும் வேற வழி இல்லாததால் நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லி விஜயாவை சமாதானப்படுத்தி விடுகிறார்.

ஆனால் மனோஜ் நம்மிடம் அவ்வளவு பணம் எங்கு இருக்கிறது எல்லா பணமும் பிசினஸ்க்காக செலவாகிவிட்டது என்று சொல்லுகிறார். அப்படி என்றால் என்னுடைய தாலியை வைத்து பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன். பிசினஸில் லாபம் வந்ததும் எனக்கு புது தாலி வாங்கி கொடு என்று மனோஜிடம் சொல்கிறார். அடுத்ததாக முத்து அந்த திருட்டுப் போன பணத்தை கண்டுபிடிக்கும் விஷயத்தில் தீவிரமாக இருப்பதை பார்த்து எப்படியாவது அதை நிறுத்த வேண்டும் என்று ரோகினி பிளான் பண்ணுகிறார்.

அதன்படி வித்தியாவை வர சொல்லி ரோகிணி என்ன பண்ணலாம் என்ற ஐடியா கேட்கிறார். அதற்கு வித்யா, நீ மீனா மற்றும் முத்துக்கு கொடுத்த குடைச்சல் தான் உனக்கு திருப்பி கிடைத்திருக்கிறது. அவங்க சந்தோஷமாக இருக்க கூடாது என்று நினைத்தாய், ஆனால் இப்பொழுது நீ தான் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறாய் என்று குத்தி காட்டும் விதமாக பேசுகிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட ரோகிணி நீ என்ன வரவர அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று திட்டுகிறார். பிறகு பார்வதி வீட்டில் காணாமல் போன ரெண்டு லட்ச ரூபா பணத்தை எப்படியாவது அவரிடம் கொடுத்து அந்த பிரச்சினை சரி செய்ய வேண்டும். அதற்கு ஒரு ஐடியா வைத்திருக்கிறேன் என்று பார்வதி அத்தை வீட்டுக்கு போகிறார்.

அங்கே போனதும் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை நடக்கிறது. மாமா, அத்தை தான் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் அத்தையும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார். இதையெல்லாம் சரி செய்ய நான் ஒரு ஐடியா வைத்திருக்கிறேன். அதற்கு நீங்க தான் உதவி பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.

அப்பொழுது பார்வதி என்ன என்று கேட்கும் பொழுது நான் இரண்டு லட்ச ரூபாய் பணம் தருகிறேன். அதை நீங்க மறந்து வேறு இடத்தில் வைத்து விட்டேன். இப்பொழுது கிடைத்தது என்று சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விடுங்கள். இந்த பிரச்சனையும் சரியாகிவிடும் என்று சொல்கிறார். உடனே பார்வதியும் சரி என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக அம்மாவிற்காக மனோஜ் 3 லட்ச ரூபாய் பணத்தை ஏற்பாடு பண்ணி அண்ணாமலை முன்னிலையில் முத்துவிடம் பணத்தை கொடுக்கிறார். முத்து வாங்குவதற்கு யோசித்த நிலையில் அண்ணாமலை இது உன்னுடைய பணம் தான் வாங்கிக்கோ என்று சொல்கிறார். உடனே முத்துவும் அந்த பணத்தை வாங்கி விடுகிறார். அப்பொழுது விஜயா இனி யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்று சொல்கிறார். அந்த நேரத்தில் பார்வதி விஜயாவுக்கு போன் பண்ணி ரெண்டு லட்ச ரூபா பணம் திருட்டு போகவில்லை கிடைத்துவிட்டது என்று சொல்லி பிரச்சினையை முடித்து விடுகிறார்.

ஆனால் ரோகிணி செய்த தில்லாலங்கடிக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு பதிலாக மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கும் விதமாக கர்மா பதிலடி கொடுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் இனி ரோகினி மாட்டிக்கொண்டு தவித்து முத்துவிடம் சிக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News