Tamil Cinema News | சினிமா செய்திகள்
மனோபாலா வெளியிட்ட இளம் வயது புகைப்படம்.. 50 வருஷமா ஒரு மனுஷன் அப்படியே இருக்காரு!
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் மனோபாலா. சமீபகாலமாக யூடியூப் சேனலில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இன்றைக்கு தேதியில் தமிழ் சினிமாவில் உருவாகும் அனைத்து படங்களிலும் ஒரு சின்ன கதாபாத்திரத்திலாவது வந்து போகும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வருகிறார்.
மனோபாலா பல படங்களில் நடித்திருந்தாலும், இயக்குனராகவும் பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஊர் காவலன் என்ற வெற்றிப் படத்தை எடுத்திருந்தார்.

manobala-cinemapettai
மனோபாலா சமீபத்தில் தன்னுடைய இளமைக் கால புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அப்போது எப்படி பார்ப்பதற்கு இருக்கிறாரோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறார்.

manobala-cinemapettai-01
தலைமுடி, உடம்பு, கண்ணாடி என எதிலுமே மாற்றமில்லை. கிட்டதட்ட 50 வருட காலமாக ஒரே மாதிரி உடலை வைத்திருப்பது கடினம்தான். ஆனால் அதை அசால்ட்டாக செய்து வருகிறார் மனோபாலா.
தற்போது 67 வயதை எட்டியிருக்கும் மனோபாலா இன்னமும் இளமை துடிப்புடன் படங்களில் நடித்து வருவது பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. மனோபாலா நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
