சிம்பு போல பிரபல நடிகரை தூக்கிவிட்ட வெங்கட்பிரபு.. பிட்டு படமா இருந்தாலும், குவியும் வாய்ப்பு

சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வந்த சிம்புக்கு மாநாடு என்ற படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தால் வெங்கட்பிரபு. இதேபோல் மாநாடு படத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட மன்மதலீலை படத்திற்கு ரசிகர் மத்தியில் நடுநிலையான விமர்சனங்கள் கிடைத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மன்மத லீலை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஏனென்றால் ட்ரெய்லரில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள். மேலும், அடுத்த கமல் அசோக் செல்வன் என பலரும் கூறிவந்தனர்.

மேலும், இப்படத்தின் ட்ரைலர் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஆனால் படம் வெளியான பிறகு இது கவர்ச்சி படம் தவிர ஆபாசம் படம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் வெங்கட்பிரபு எங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு கவுரவம் உள்ளது, எப்போதும் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என அறிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல் அனைவரையும் கவரும் படி தான் மன்மத லீலை படம் இருந்தது. படம் சென்சாரிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக தான் வந்தது. மேலும் மன்மத லீலை படம் ஒரு காமெடி படமாக வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு பிறகு அசோக்செல்வன் அடுத்த ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மன்மத லீலை படத்தினால் அவருக்கு சரியான லக்கி ப்ரைஸ் அடித்திருக்கிறது. முதலில் இப்படத்தினால் அசோக் செல்வனின் பட வாய்ப்புகள் பறிபோகும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இவருக்கு வெங்கட்பிரபு ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே இவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் மன்மதலீலை படமும் இவருக்கு பாராட்டு தான் வாங்கித் தந்துள்ளது. இதனால் இனிமே மாஸ்ஹீரோ வரிசையில் அசோக்செல்வனும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட்பிரபுவின் மாநாடு படம் சிம்பு மற்றும் வெங்கட்பிரபு இருவருக்குமே மார்க்கெட் உயர்ந்த நிலையில் தற்போது மன்மதலீலை படத்தால் அசோக் செல்வனும் வேற லெவலுக்கு சென்றுள்ளார். வெங்கட்பிரபு தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்கயுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்