fbpx
Connect with us

மங்காத்தா படத்தில் அஜித் இல்லையாம் இவர்தான் நடிக்க வேண்டியது.. மைக் பிடித்து புலம்பிய பிரபல நடிகர்

ajith-mankatha1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா படத்தில் அஜித் இல்லையாம் இவர்தான் நடிக்க வேண்டியது.. மைக் பிடித்து புலம்பிய பிரபல நடிகர்

கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் நெகட்டிவ்வான மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்ததால் மிகபெரிய வெற்றி பெற்றது. இந்த ரோலில் நடிக்க வெங்கட் பிரபு வேற ஒரு திட்டம் வைத்திருந்தாராம்.

அதவாது மங்காத்தா படத்தில் ஐந்து புது முகங்களை வைத்து அல்லது வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு எடுப்பதாக இருந்தார். ஆனால் ஒரு நாள் அஜித் வெங்கட் பிரபுவிடம் ஒரு கதை கேட்டிருந்தார் அவரும் மங்காத்தா கதையை எதார்த்தமாக சொல்லி உள்ளார். உடனே அஜித் இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று கூறி புக் ஆகி விட்டார்.

முன்னதாக வெங்கட் பிரபு முடிவு செய்து வைத்திருந்த ஐந்து நடிகர்களில் நடிகர் ஜெய்யும் ஒருவர். அவருக்கு ஒரு போலீஸ் அதிகாரி வேடம் இருந்ததாகவும் பின்னர் அஜித் நடித்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு போய்விட்டதாகவும் ஒரு மேடையில் கூறினார்.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் நல்ல வேலை ஜெய் நடிக்கவில்லை என பெரு மூச்சி விடுகின்றனர். அஜித்தின் முக்கியமான கால கட்டதில் அவ்ளோ பெரிய மாசான கதாபாத்திரத்தில் தல நடித்ததால் அவரும் வேற லெவல் சென்றார்.

ஆனாலும் கூட இயக்குனரிடம் ஒரு கெஸ்ட் ரோலாவது கூடுங்க என்று கேட்டாராம் ஜெய், அப்போது ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை என்று மேடையில் கூடுதல் செய்தியாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top