Tamil Cinema News | சினிமா செய்திகள்
மங்காத்தாவில் அஜித்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர்கள் இவர்கள்தான்.. நல்லவேளை அவங்க இல்லை
2011 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா ஜெரெமையா, வைபவ், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் வரும் விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் தல அஜித்திற்கு முன்னதாக விவேக் ஓபராய் மற்றும் சத்யராஜ் நடிப்பதற்காக பேசப்பட்டு கைவிடப்பட்டுள்ளது.
பின் அஜித் தானாகவே முன் வந்து இந்த கதாபத்திரத்தில் நடித்துள்ளாராம். ஆனால் தல அஜித்திற்கு விநாயக் கதாபாத்திரத்தை வெங்கட்பிரபு செதுக்கி இருப்பார் என்று தான் கூற வேண்டும், வசூல் ரீதியாகவும் பிரமாண்ட வெற்றி பெற்ற படமாகப் பார்க்கப்பட்டது.
அஜித்தின் சினிமா வாழ்க்கை புரட்டிப் போட்ட மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நெகட்டிவான கதாபாத்திரமாக இருந்தாலும், ஆக்சன் கிங் அர்ஜுனுடன் இணைந்து தல அஜித் மிக அற்புதமாக நடித்திருப்பார்.

mankatha
விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
