தல அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இப்போது ‘மங்காத்தா 2’ பற்றி லேட்டஸ்ட்டாக வாரஇதழ் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அதில்… ‘மங்காத்தா பார்ட் 2வை இயக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது,அதுவும் கண்டிப்பாக நடக்கும், அது இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம்… அல்லது புதிய கதையாகவும் இருக்கலாம்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும் வெங்கட், சிம்புவை வைத்து ‘பில்லா 2018’ படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.