Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓடும் காரில் நடந்த பாலியல் கொடுமை.. பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்த மஞ்சுவாரியர்
ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், நடிகை மஞ்சு வாரியர் நீதிமனறத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
பிரபல நடிகை பாவனா கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த விவகாரத்தில் டிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தார்கள். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. தினமும் ஒருவர் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

bhavana
இதில் நடிகரும் இயக்குனருமான லால், தனது மனைவி, தாய் மற்றும் மருமகளுடன் நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார். இதேபோல் நடிகை ரம்யா நம்பீசன் தனது சகோதரருடன் சென்று வாக்குமூலம் அளித்தார்.
பாதிக்கப்பட்ட நடிகையும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள் ஆவர். இதனிடைய இதையடுத்து நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் இன்று வாக்குமூலம் அளித்தார். நடிகர் சித்திக், நடிகை பிந்து பணிக்கர் ஆகியோரும் வாக்குமூலம் அளித்ததார்கள்.
