Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது அசுரன் பட நாயகியின் மலையாள பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! சேவல்களுக்கு மத்தியில் கோழியாக
மஞ்சு வாரியார் – மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர். சிறந்த நடிகைக்கான பல விருதுகளை குவித்தவர். 1998 இல் திலீப் அவர்களை திருமணம் செய்தார். சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரினார். அதன் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஹொவ் ஓல்ட் ஆர் யூ (அதாங்க ஜோதிகாவின் 36 வயதினிலே ) வாயிலாக 2014 இல் கம் பேக் கொடுத்தார். பின்னர் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அசுரன் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார் இந்த 41 வயதான நாயகி.
பிரதி பூவான்கோழி – ரோஷன் ஆன்ட்ரயூஸ் இயக்கத்தில் மாதுரி என்ற ரோலில் இவர் நடிக்கும் படம். உன்னி என்பவற்றின் நாவலை அடிப்படையாக கொண்டு ரெடியாகும் படம். இப்படத்தில் துணிக்கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ள் வேடத்தில் மஞ்சு மற்றும் அனுஸ்ரீ நாயர் நடிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை சமயத்தில் ரிலீசாகும் இப்படத்தின் முதல் லுக் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Manju Warrier in prathi poovankozhi
கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசை. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
