மஞ்சு வாரியர் தமிழில் மூன்று படங்கள் நடித்துள்ளார். பட கதையை விட அந்த படத்தை யாரு இயக்கப் போகிறார் என்பதை தான் முதலில் பார்ப்பாராம். அப்படி மூன்று பேரை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் இந்த மலையாள சேச்சி. இவர் தமிழில் நடித்தது மொத்தம் மூன்று படங்கள் தா
2019 ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படம் தான் இவருக்கு தமிழ் என்ட்ரி கொடுத்து அறிமுகமாகியது. அந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் என கேள்விப்பட்டதும் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். அது மட்டும் இன்றி ஹீரோ தனுஷ் என்பதால் கொஞ்சம் யோசித்தாராம். ஆனால் படத்தை பார்த்து மிரண்டு விட்டாராம் சேச்சி.
2023ஆம் ஆண்டு ஹெச் வினோத் இயக்கிய துணிவு படம் தான் மஞ்சுவாரியருக்கு இரண்டாவது வாய்ப்பு. ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை பார்த்ததால் கதையை கேட்காமல் இந்த டைரக்டருக்கும் உடனே கால் சீட் கொடுத்துவிட்டாராம்.
வேட்டையன் படத்தால் குஷி மூடில் சேச்சி
இப்பொழுது ரஜினியின் வேட்டையன் படத்தில் ரஜினியே புகழ்ந்து தள்ளும் அளவிற்கு அழகு பதுமையாக காட்சியளித்துள்ளார். மஞ்சு வாரியர் நடிப்பை பற்றி பேச தேவையே இல்லை, பட்டையை கிளப்பி விடுவார். சூப்பர் ஸ்டாரே இவர் அழகை பார்த்து தல தலவென இருக்கிறார் என வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிவிட்டார்.
வேட்டையன் படத்திற்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் 3 கோடிகள். நயன்தாரா, திரிஷாவை விட கம்மியான சம்பளம் என்பதால் இப்பொழுது இவரை தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கமிட் செய்து வருகிறார்கள். அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருக்கிறது. மூன்று பேருக்கும் அவ்ளோ பெரிய வயது வித்தியாசங்கள் இல்லை.
- வேட்டையன் ஆடியோ வெளியீட்டுக்கு வரும் விஐபி
- இந்தவாட்டி தலைவர் ஆடு கதை சொல்வாரோ
- வேட்டையன் படத்தையும் விட்டு வைக்கல, சம்பவம் செய்த வசந்தி