Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெர்சல் விஜய் – நித்யாமேனன் ஸ்டைலில் வெளியானது தனுஷ் – மஞ்சு வாரியரின் “அசுரன்” புதிய போஸ்டர். லைக்ஸ் அள்ளுது.
Published on
அசுரன்
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார். ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Asuran FLP
முன்னர் அறிவித்தது போலவே இன்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. மஞ்சு வாரியர் தான் ஹீரோயின் என்றதும் பலரும் வயது சீனியர் நடிகை, பொருத்தம் எப்படி இருக்குமோ என்று கேட்டு வந்தனர்.

ASURAN
அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் லைக்ஸ் குவித்து வருகின்றது.
எனினும் இந்த போஸ்டர் மெர்சல் போஸ்டரின் தழுவல் என்று சொன்னால் அது மிகையாகாது.
