Connect with us
Cinemapettai

Cinemapettai

மலையாள மஞ்சு வாரியருடன் நம்ம ஊரு ராட்சஷி அபிராமி செல்பி.. அசுரன்-ல என்ன பண்ணாங்க தெரியுமா?

asuran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலையாள மஞ்சு வாரியருடன் நம்ம ஊரு ராட்சஷி அபிராமி செல்பி.. அசுரன்-ல என்ன பண்ணாங்க தெரியுமா?

மலையாள திரை உலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மலையாள வெர்ஷன் “36 வயதினிலே” படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார், மஞ்சுவாரியர். தொட்டதெல்லாம் பொன் என்பதைப்போல இவர் நடித்த அனைத்து படங்களும் வரிசையாக ஹிட் அடித்து வருகின்றது.

நீண்ட நாட்களாக மலையாள சினிமாவிலேயே இருந்த மஞ்சு வாரியர் தற்போது, அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆகிறார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் “அசுரன்” படம் உருவாகியிருக்கிறது.

இதே படத்தில் சிறுவயது மஞ்சு வாரியராக, நம்ம ராட்சசன் புள்ள “அம்மு அபிராமி” நடித்துள்ளார். சிறுவயதிலேயே தனுசுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்.

ராட்சசன் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.இதற்கு முன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது அசுரன் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மஞ்சுவாரியர் மற்றும் அபிராமி இருவரும் ஒரே நாளில் டப்பிங் பேச வந்துள்ளனர். அங்கே எடுத்த செல்ஃபி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top