Tamil Cinema News | சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட ஹீரோயின் பற்றிய அப்டேட் வெளியிட்ட ஸ்டூடியோ க்ரீன் .
Published on
கவுதம் கார்த்திக்
கடந்த ஒரு வருடமாக தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்டார். காதல் , ஆக்ஷன், அட்வன்ச்சர், காமெடி, அடல்ட் காமெடி என நகர்கிறது இவர் சினிமா க்ராப். இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 15 வது படத்தின் பெயர் “தேவராட்டம்”. கவுதம் தான் ஹீரோ. இப்படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் போன்ற படங்களை இயக்கிய முத்தய்யா இயக்குகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, நிவாஸ் பிரசன்னா இசை . எடிட்டிங் பிரவீன்.
ஏற்கனவே சூரி முக்கிய வேடத்தில் நடிப்பது முடிவான நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிப்பதாக தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
