Connect with us
Cinemapettai

Cinemapettai

manjima mohan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் வீட்டின் முன் கால்கடுக்க நின்ற மஞ்சிமா மோகன்.. அந்த அளவிற்கு தீவிர ரசிகையாம்

தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற்றார்.

இப்படம் வெளியானதிலிருந்து மஞ்சுமா மோகனுக்கு என்றே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் உருவாகினர். இவரது நடிப்பில் தற்போது விரைவில் வெளியாகவுள்ள  திரைப்படம் களத்தில் சந்திப்போம்.

களத்தில் சந்திப்போம் படத்தின் புரமோஷனுக்காக பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்த மஞ்சிமா மோகன்னிடம் நிருபர்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது நிருபர் நீங்கள் யாருடைய ரசிகர் என கேள்வி எழுப்ப அதற்கு சற்றும் யோசிக்காமல் சூர்யா ரசிகர் என பதிலளித்துள்ளார்.

manjima mohan surya

manjima mohan surya

மேலும் மஞ்சிமா மோகன் என்னுடைய நண்பர்களும் சூர்யா ரசிகர்கள் தான் என்றும், இவர்கள் எல்லோரும் ஒன்றாக சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு முன் நின்று சூர்யாவை பார்ப்பதற்கு காத்திருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது சூர்யாவையும் ஜோதிகாவையும் நேரில் பார்த்ததாகவும் அப்போது ஜோதிகா சூர்யாவிடம் இவங்கதான் மஞ்சிமா மோகன் என அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்ட சூர்யா ரசிகர்கள் கவலைப் படாதீங்க மேடம் நீங்கள் சூர்யா ரசிகர் என சொல்லியதால் விரைவில் சூர்யாவுடன் ஜோடி சேருகிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top