Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆபரேஷனுக்கு பின் உருக்கமான மெசேஜுடன் போட்டோ பதிவிட்ட மஞ்சிமா மோகன்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆபரேஷனுக்கு பின் உருக்கமான மெசேஜுடன் போட்டோ பதிவிட்ட மஞ்சிமா மோகன்..

மஞ்சிமா மோகன் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சதிரமாக துவக்கினார். பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர்.

நடிகர் சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் அறிமுகமானார் . அதன் பின்னர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என நடித்துள்ளார். இவர் கை வசம் தமிழில் களத்தில் சந்திப்போம், வட்டம், எப்.ஐ.ஆர், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் உள்ளது.

 

கடந்த சில வாரங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதாகவும், அதனால், காலில் காயம் ஏற்பட்டதாகவும் நடிகை மஞ்சிமா மோகன் தன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

MANJIMA MOHAN

காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு மாதம் கட்டுடன் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முன் “உங்கள் வாழ்க்கையில், எதிர்கொண்ட கடினமான தருணம் எது ?” என என்னிடம் கேட்ட சிலர் உண்டு. ‘அதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் இல்லை.’ என பதில் சொல்வேன் ஆனால் இப்பொழுது அப்படி சொல்லமாட்டேன்.

இந்த சம்பவம், என்னை மாற்றிவிட்டது.எல்லாம் ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது. இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார்.

Manjima Mohan instagram feed

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top