Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகருடன் காதலா? ஷாக் கொடுத்த மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான மஞ்சிமா மோகன் தன் மீதான காதல் குறித்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
1998ம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்னும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தொடர்ந்து, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். இவரின் நடிப்பில் மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி இவரை நாயகியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றது. இதை தொடர்ந்து, சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். கொழுகொழு முகம், அடுத்த வீட்டு பெண் என்ற தோற்றத்தில் ரசிகர்களிடம் செம அப்ளாஸை பெற்றார். தமிழில் இப்படை வெல்லும், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது, கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சிமா மோகன். முத்தையா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், நடிகர் ரிஷியுடன் மஞ்சிமா லவ் மூடில் இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் ரவுண்ட் கட்டியது. பலரும் அதனால் மஞ்சிமா பட வாய்ப்புகளை ஒதுக்கி வருகிறாரோ எனக் கூட பேசத்தொடங்கினார்.
இதுகுறித்து, மஞ்சிமா முதல்முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். இது வெறும் ரசிகர்களுக்காக சொல்வது இல்லை. உண்மையிலேயே, என்னுடைய நல்ல நண்பன் ரிஷி தான். மேலும், நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் ரிஷி. இவர் அனிருத்தின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
