Connect with us
Cinemapettai

Cinemapettai

ரசிகருக்கு மஞ்சிமா மோகன் அனுப்பிய கவர்ச்சி புகைப்படம்.. வேற லெவல்!

manjima-mohan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகருக்கு மஞ்சிமா மோகன் அனுப்பிய கவர்ச்சி புகைப்படம்.. வேற லெவல்!

தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்பி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.

அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இடையில் நடந்த ஒரு ஆக்சிடெண்ட் காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்தடுத்து துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்கள் தமிழில் இருக்கின்றன.

இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மஞ்சிமா மோகனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை அனுப்பு சொல்லி கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தாமதிக்காமல் மஞ்சிமா மோகன் தனது குழந்தை வயது புகைப்படத்தை அனுப்பி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

manjima-mohan-cinemapettai

manjima-mohan-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top