Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த போட்டோவை பார்த்து கொஞ்சலான என் கட்டை வேகாது.. இணையத்தில் திணறடிக்கும் மஞ்சிமா மோகன் புகைப்படம்!

மலையாளம் மற்றும் தமிழ் இளசுகளின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மஞ்சிமா மோகன். 

மலையாள நடிகை மஞ்சிமா மோகன் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற  படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.  அவருக்கு தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’ போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள தனது தந்தைகான பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைத்தளவாசிகளின் இதயத்தை ஈர்த்துள்ளது.

மஞ்சுமா தனது  தந்தையின் மடியில் குழந்தைப்பருவத்தில்  அமர்ந்தபடி இருக்கும் க்யூட்டான போட்டோவுடன் “எனது நண்பர்,  பாதுகாவலர் மற்றும் தந்தை” என்று கூறி தனது தந்தைக்கு ட்விட்டர் பக்கத்தின் மூலம் பிறந்தநாள் வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

இந்த பதிவின் மூலம் தனது  தந்தையையும் ரசிகர்களையும்  குஷிப்படுத்தியுள்ளார் மஞ்சிமா மோகன்.

மஞ்சிமா மோகனின் தந்தை மூத்த ஒளிப்பதிவாளரான விபின் மோகன் ஆவார். இவர் ‘பிங்காம்’,’ மட்டஞ்சேரி’ போன்ற பல மலையாள திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

manjuma-mohan

manjuma-mohan

மஞ்சிமாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அள்ளிக் கொஞ்சம் முடியாமல் பதருகின்றனர். மேலும் இந்த போட்டோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
To Top