fbpx
Connect with us

Cinemapettai

நான் காணாத கனவு நிறைவேறியது. லைக்ஸ் குவிக்குது எஸ் ஜே சூர்யா பதிவிட்ட போட்டோஸ். 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் காணாத கனவு நிறைவேறியது. லைக்ஸ் குவிக்குது எஸ் ஜே சூர்யா பதிவிட்ட போட்டோஸ். 

எஸ் ஜே சூர்யா தனது புதிய படத்தின் துவக்கத்தை பற்றி போட்டோவுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் கனவு. அதனை அடைவதற்கு அவர் எடுத்த கொண்ட ரூட் தான் இயக்குனர் அவதாரம். இயக்குனராக ஹிட் அடித்த இவர், எதிர்பார்த்த அளவு ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.சிறிது காலம் ஒதுங்கியிருந்த இவர், இசை, இறைவி, மெர்சல். ஸ்பைடர் என ரீஎன்ட்ரி கொடுத்து தற்பொழுது நடிகராகவும் அசத்தி வருகிறார்.

உயர்ந்த மனிதன் 

தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரெடியாகும் படம்.

தா . தமிழ்வாணன் ( கள்வனின் காதலி) இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Uyarntha Manithan

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தான் மனிதர் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Uyarntha Manithan

Uyarntha Manithan

மேலும் இது தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனவும், தான் காணாத கனவை நிறைவேற்றிய கடவுள் , அப்பா , அம்மாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

அதோடு நடிக்க சம்மதித்த அமிதாப் பச்சனுக்கும், வாய்ப்பை அமைத்துக்கொடுத்த ஏ ஆர் முருகதாஸுக்கும், தலைப்பு, போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் தன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top