manitha-movie-reviewகதை:

ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல், போராடிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி, சுற்றி இருப்பவர்கள் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாத அப்பாவி, ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் தான், தன் மாமாவிடம் பொண்ணு(ஹன்சிகா) கேட்க முடியும் என கோபமாக சென்னை கிளம்பி செல்கிறார்.

சென்னையில் இதற்கு மேல் கஷ்டப்படுகிறார், விவேக்கை நம்பி உதயநிதி சென்னை வந்தால் அவரே அங்கு ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருகின்றார். இந்த நேரத்தில் தான் நாடே தீர்ப்பு எதிர்ப்பார்க்கும் ஒரு வழக்கில் வாண்ட்டாக ஆஜர் ஆகிறார் உதயநிதி.

நடைப்பாதையில் படுத்திருந்தவர்களை கார் ஏற்றி கொன்ற ஒரு பெரிய இடத்து பையன் வழக்கை, கையில் எடுக்கிறார். ஆனால், அந்த பையனுக்கு ஆதரவாக இந்தியாவில் நம்பர் 1 வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடுகிறார்.

அதிகம் படித்தவை:  Pokkiri Raja - Athuvutta Making Video

ஊரே தன்னை ஒரு மொக்கை லாயர் என்று சொல்கின்றது, நாம் சாதிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக உதயநிதி களம் இறங்க, இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே மீதிக்கதை

விமர்சனம் :

படத்தின் பல காட்சியமைப்புகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது, உதயநிதி ஒரு சாதரண மனுஷனாக கேஸை வாபஸ் வாங்க பணம் வாங்கி, அவர் திருந்தும் இடத்திற்கு வைத்த காட்சிகள் கிளாஸ், அதைவிட கிளைமேஸில் நடைப்பாதையில் படுத்திருந்து தன் குடும்பத்தை இழந்தவர் கோர்ட்டில் பேசும் இடம் சூப்பர் அஹமத்.

படத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு, இசையும் தான், மதியின் கேமராவில் நீதிமன்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார், சந்தோஷ் நாரயணின் இசையின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் , அதை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார், அதிலும் குறிப்பாக ‘அதோ’ BGM படத்தின் கதையை தாங்கி செல்கின்றது.

அதிகம் படித்தவை:  மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம்: சுந்தர் சி.யை அதிர வைத்த தயாரிப்பாளர்

கிளைமேக்ஸில் உதயநிதியும், பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் வசனம் ‘உங்களுக்கு தெரியாத விஷயத்தில் அறிவை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்’ போன்றவை யோசிக்க வைத்து ரசிக்க வைக்கின்றது.

இவை அனைத்தையும் விட, ரீமேக் படம் என்றாலும், நம் சமூகத்தில் பணக்காரர்களால் நடக்கும் பெரிய விபத்துக்களை எப்படி மூடி மறைக்கிறார்கள் என காட்டிய களம்.

மொத்தத்தில்: இதுவரை உதயநிதி  நடித்த 5 படங்களில் இது தான் பெஸ்ட் !!

ரேட்டிங்-3.0/5