fbpx
Connect with us

தனியார் பஸ்ஸில் “மனிதன்” திருட்டு டிவிடி சிக்கியது – விஷால், கார்த்தி அதிரடி

தனியார் பஸ்ஸில் “மனிதன்” திருட்டு டிவிடி சிக்கியது – விஷால், கார்த்தி அதிரடி

நேற்று இரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் ‘விஷாலு’க்கு தெரியப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து ‘விஷால்’ மற்றும் பொருளாளர் ‘கார்த்தி’ ஆகியோரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ‘ஸ்ரீமன்’ மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஜெயலட்சுமி IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் திரு.மகேந்திரன் மற்றும் திரு.நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ்ஸில் புதிய படம் ஒளிபரப்புவதை பிடிக்கபடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் ‘தெறி’ படம் ஒளிபரப்பியது பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top