manithan_2016உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மூன்று நாட்கள் கலெக்ஷன் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் ‘மனிதன்’ திரைப்படம் ‘வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ரூ.4.55 கோடி வசூல் செய்துள்ளது. இன்றும் அனைத்து திரையரங்குகளிலும் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வந்துள்ளதால் இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உதயநிதி, ஹன்சிகா,விவேக், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பாலிவுட்டில் வெளியான ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.