மணி ரத்னம் இயக்கிய பம்பாய் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. அதன்பிறகு இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

நேபாளத்தை சேர்ந்த இவர் தனது கணவர் சாம்ராட் தகாலை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மும்பையில் தனியாக வசித்து வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தன்னிடம் அன்பு காட்டும் ஒருவரை மணக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக இந்தி பட உலகில் தகவல் பரவி வருகிறது.