Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்தார்த், கவுதம் கார்த்திக் பட ஹீரோயினை திருமணம் செய்யப்போகிறார் மனிஷ் பாண்டே

சினிமாவுக்கும் – கிரிக்கெட்க்கும் எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷல் கெமிஸ்ட்ரி உண்டு. இந்தியாவில் பல ஹாட் ஜோடிகள் அதற்கு உதாரணம். ஷர்மிளா தாக்குர் – மன்சூர் அலி கான் பட்டோடி, அசாருதீன் – சங்கீதா பிஜிலானி , யுவராஜ் – ஹஸீல் கீச், ஹர்பஜன் – கீதா பஸ்ரா, விராட் – அனுஷ்கா சர்மா, சாஹிர் கான் – சகாரிக்கா என லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகும். அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் மனிஷ் பாண்டே – அஷ்ரிதா ஷெட்டி.

மனிஷ் பாண்டே பெங்களூருவை சேர்ந்தவர். மத்திய வரிசை பேட்ஸ்மேன். கோலி, ஜடேஜாவுடன் யூ 19 உலகக்கோப்பை ஆடியவர். சிறந்த பீல்டர். ஐபில் இல் சத்தம் அடித்த முதல் இந்திய வீரர். இந்தியாவின் நம்பர் 4 இடத்திற்கு ஏற்றவர், எனினும் வாய்ப்பு தான் அதிகம் கொடுக்கப்படவில்லை.

அஷ்ரிதா ஷெட்டி- நமக்கு மிகவும் பழக்கப்பட்டவர், உதயம் NH4 , ஒரு கண்ணியும் மூன்று களவாணியும், இந்திரஜித் படங்களில் நடித்தவர். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Ashritha Shetty

இவரும் மனிஷும் காதலித்துள்ளனர். இரு குடும்பங்களும் சம்மதிக்க திருமணம் டிசம்பர் 2 நடைபெறுவதாக சொல்கின்றனர். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top