fbpx
Connect with us

நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர்.!

maniratnam

News | செய்திகள்

நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர்.!

நிவின் பாலி, நட்டி என்கிற நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்துள்ள படம், ’ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ’உல்லிடவரு கன்டன்டே’- படத்தின் ரீமேக். மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் நிவின் பாலி கூறும்போது, திரைத்துறைக்கு வந்த நாள் முதலே தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ’நேரம்’ இருமொழி படம்.

nivin

இதுதான் என் முதல் நேரடி தமிழ்ப்படம். பிரேமம் படம் தமிழில் ஹிட்டாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. ’ரிச்சி’ படத்தின் ஒரிஜினலை பார்த்தேன். இதில் எனக்கு நடிக்க வாய்ப்பிருப்பது தெரிந்ததால் சம்மதித்தேன்.

ஆரம்பத்தில் இயக்குனர் கவுதமிடம் இதில் தமிழ் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். ஆனால், அவர் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்றார். தமிழுக்காக காட்சியில் மாற்றங்கள் செய்திருக்கிறார். என்னைச் சுற்றி தமிழ்ப் பேசுபவர்களை இருக்க வைத்துக்கொண்டு தமிழ்க் கற்றேன்.

தமிழில் யார் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு அந்த ஆசை இருக்கிறது.

இருவரும் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேசினோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என நிறைய பேர் இருக்கிறார்கள்.

nivin-pauly

தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அதை ரிச்சி படம்தான் தீர்மானிக்கும். இந்தப் படம் ஹிட்டானால் என்னை அழைப்பார்கள். தோல்வி அடைந்தால் என் நம்பரை கூட டெலிட் பண்ணி விடுவார்கள்’ என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top