மணிரத்னம் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை. கடைசியாக இவர் இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த ‘காற்று வெளியிடை’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து ஏமாற்றியது.இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகவல் வெளியானது.

தற்போது, இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

சிம்பு மணிரத்னம் கூட்டணி உறுதியானதையடுத்து சிம்பு ரசிகர்களும், மணிரத்னம் ரசிகர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். நெட்டிஸன்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். மணிரத்னம் – சிம்பு காம்போ. இனிமே கொண்டாட்டம் தான். என தாரை தப்பட்டையோடு உற்சாகமாகிறார்கள் ரசிகர்கள்.நோட் பண்ணி வச்சிக்கங்க அடுத்த வருசத்தோட மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் இந்தப் படம்தான்.

‘ப்ரேமம்’ படத்தில் கெத்தாக வரும் நிவின் பாலி குரூப்பின் படத்தைப் பதிவிட்டு உற்சாகத்தைக் காட்டுகிறார்கள் ரசிகர்கள். தலைவன் ஒரு க்ளாசிக் படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டோம். மணிரத்னம் படத்துலேயே நடிக்கப் போறார்.

‘சிம்புவுடன் மணிரத்னம் மேஜிக் ஆன் தி வே’ என செய்தியைக் கேட்டதும் உற்சாகமாயிருக்கிறார்கள் எஸ்.டி.ஆர் ஃபேன்ஸ்.மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தின் ஸ்டில்லை பதிவிட்டு வெற்றியை குறியீடாகச் சொல்லி இருக்கிறார்கள்.

maniratnamமணிரத்னம் டைரக்ட் பண்ணின ‘நாயகன்’, தளபதி, சிம்பு நடிச்ச ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தையெல்லாம் போடுடா…பல ஸ்டார்கள் நடிக்கும் மணிரத்னம் படத்தில் சிம்பு. படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் காத்திருக்க முடியாது போலயே…

சிம்புவும், மணிரத்னமும் சேர்ந்து படம் பண்ணப்போறதைக் கேள்விப்பட்ட நடிகரின் ரியாக்ஷன் இதுவாம்.’விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதியும், மாதவனையும் போல இந்தப் படத்தில் விஜய் சேதுபதி – சிம்பு காம்போ இருக்குமாம்.