fbpx
Connect with us

Cinemapettai

மணிரத்னம் பண்ணிய மேஜிக்.. அன்றைய காதலர்களை ஒரு வழி பண்ணிய அலைபாயுதே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மணிரத்னம் பண்ணிய மேஜிக்.. அன்றைய காதலர்களை ஒரு வழி பண்ணிய அலைபாயுதே

மணிரத்னம் போடும் மேஜிக் ஒவ்வொரு காலகட்டத்தில் அவருடைய படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தார் போல் தனது படங்களின் மூலம் மாற்றத்தை உருவாக்கி வெளியிடுவார் அல்லது அந்த காலகட்டத்தை அவருடைய படங்கள் மாற்றிவிடும்.

டிரென்ட் செட்டர் என்பது போல் தனது படங்களை எடுத்து வரும் மணிரத்தினம் அவருடைய பாணியிலிருந்து விலகி புதிதாக அன்றைய காலகட்டத்திற்கு தகுந்தது போல் எடுத்ததுதான் அலைபாயுதே. அந்த படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர்களை வைத்து படம் எடுத்து இருந்தால் அலைபாயுதே படத்திற்கு இப்படி ஒரு கிளாரிடி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

புதுமுகங்களாக இருந்த மாதவனை நடிக்க வைத்து பெரிய வெற்றியை அடைந்தார். அதேபோல் ஓகே கண்மணி படத்தையும் இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தது போல் எடுத்து அதனையும் வெற்றி பெறச் செய்தார்.இப்படி தற்போதைய காலகட்டத்திலும் வரப்போகிற காலகட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்து அவர் எடுக்கும் சில காட்சிகள் எந்த காலகட்டத்திற்கு பொருந்தும்.

யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் தனியாக படம் எடுத்து வெற்றி கண்டவர். மணிரத்தனம் ஏற்கனவே ஒருமுறை கூறியது போல் ‘நல்ல இசையமைப்பாளர் நல்ல உதவி இயக்குனர்கள் நல்ல ஒளிப்பதிவாளர் நல்ல எடிட்டர் என நல்ல ஒரு டீம் அமைந்தால் நல்ல படம் எடுப்பதில் 50 சதவீதம் கூட சிரமம் இருக்காது என்று கூறினார். அதுவே உண்மை.

நல்ல ஸ்கிரிப்ட் கையில் வைத்துக்கொண்டு படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். அவருடைய அலைபாயுதே படத்தின் பச்சை நிறமே பாடலுக்கு பி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு இந்திய அளவில் பேசப்பட்டது.

அதன் வீடியோ:

அதே போல அவருடைய அலைபாயுதே படத்தை மீண்டும் நீங்கள் பார்க்க வேண்டுமானால் கீழே உள்ள படத்தின் லிங்கை கிளிக் செய்து முழுவதும் பார்க்கலாம்.

அலைபாயுதே படத்தின் காட்சிகளை பார்க்க: Click here

அலைபாயுதே முழு படத்தையும் அமேசான் மூலம் பார்க்க: Click here

Continue Reading
To Top