Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த பட்ஜெட் படத்தை தாங்குவாரா ஜெயம்ரவி? விஷப்பரிட்சை எடுக்கும் மணிரத்னம்
தமிழ் சினிமாவில் மிகவும் மென்மையான எளிமையான நடிகர் என பெயர் பெற்றவர் ஜெயம் ரவி. படத்திற்கான தேவைகள் எதுவுமே இல்லாமல் கதைகளை தெளிவாக தேர்வு செய்து நம்ம வீட்டுப் பையனைப் போல் நடித்து அனைத்து தாய்மார்கள் இடமும் நல்ல பெயரை பெற்று வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில்(800 கோடி) தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதைக் கருவே ஜெயம்ரவி தானாம். இந்த கதாபாத்திரத்திற்கு சிவாஜிகணேசனை போல் நெஞ்சை நிமிர்த்தி மிரட்டும் தோற்றமும் கண்களிலே கதை சொல்லும் வித்தையும் தெரிந்திருக்க வேண்டும்.
வீரபாண்டிய கட்டபொம்மனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா. அதேபோலான பவர்ஃபுல் வேடம்தான் ஜெயம்ரவிக்கு. ஆனால் அவரின் குரல் எளிமையாகவும் தன்மையாகவும் இருப்பதால் இந்த கேரக்டருக்கு எப்படி செட் ஆவார் என முதலில் ஜெயம் ரவியே தயங்கினாராம்.
அவருக்கு மணிரத்தினம், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான் ராஜா என்ற நினைப்புடன் நெஞ்சை நிமித்தி நேர்கொண்ட பார்வையுடன் செயல்பட்டால் போதும் என அட்வைஸ் செய்துள்ளார். அதன்பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்தாராம் ஜெயம் ரவி.
பின்ன ராஜராஜசோழன் என்றால் சும்மாவா!
